‘தொழில்முனைவோர்கள் ஏமாற்ற நினைப்பதில்லை’
கடந்த சில வருடங்களாகவே இ-காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. தொழில் முனைவோர்களின் சிந் தனை, தொழில்நுட்பம், சந்தையின் தேவை என பல விஷயங்கள் இருந்தாலும் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களின் பங்கு தவிர்க்க முடியாதது. அவர்கள் ஐடியாக்களின் மீது துணிந்து முதலீடு செய்யாவிட்டால் புதிய துறையின் வளர்ச்சி இவ்வளவு தூரம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. பெங்களூருவில் உள்ள முக்கியமான வென்ச்சர் கேபிடல் நிறுவனம் ஹீலியன் வென்ச்சர் பார்ட்னர்ஸ்.
இதுவரை 65 சிறு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். மேக்மை டிரிப், ஓலா, ரெட்பஸ் உள்ளிட்டவை முக்கியமான சில முதலீடுகளாகும். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆர்.நடராஜனை சந்தித்து உரையாடியதிலிருந்து..
ஒரு காலத்தில் வென்ச்சர் கேபிடல் (விசி) நிதி இருந்தால் பரவாயில்லை என்று நினைத்த நிலை மாறி, இப்போது விசி நிறுவனங்கள் மீது தொழில்முனைவோர்களுக்கு ஒருவித பதற்றம் உருவாகி இருக்கிறதே?
நாங்கள் தொழில் முனைவோர் களுக்கு எல்லாம் தெரியுமே என்ற எண்ணத்தில்தான் முதலீடு செய்கிறோம். நாங்கள் உதவி மட்டுமே செய்கிறோம். நாங்கள் சொல்வது அனைத்தையும் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் அவர்களுடைய முடிவுகள் எங்களுக்குத் தெரிய வேண்டும். நாங்கள் முதலீடு செய்த தொகை எங்கு செல்கிறது என்று கேட்பது எங்களது அடிப்படை உரிமை இல்லையா?
எங்களுக்குப் பிரச்சினை இல்லை. நாங்கள் 60 முதல் 70 நிறுவனங்கள் வரை முதலீடு செய்திருக்கிறோம். சில நிறுவனங் கள் தோற்றால் பிரச்சினை இல்லை. ஆனால் உங்களுக்கு.? ஒரே நிறுவனம்தான். அது சரியாக நடக்கிறதா என்பதைதான் நாங்கள் உறுதி செய்கிறோம்.
பலவிதமான பரிசோதனைகளையும் செய்துதான் முதலீடு செய்கிறீர்கள். ஆனால் 10-ல் 4 நிறுவனங்கள்தானே வெற்றி அடைகின்றன?
ஒவ்வொரு நிறுவனமும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் முதலீடு செய்கிறோம். பொதுவான கணக்கு என்னவென்றால் 30% நிறுவனங்கள் தோல்விடையும். 20% நிறுவனங்கள் 10 மடங்குக்கு மேல் லாபம் ஈட்டும். 20% முதல் 30% 3 முதல் 5 மடங்கு லாபம் கொடுக்கும். மீதம் இருக்கும் நிறுவனங்கள் ஒன்று முதல் இரு மடங்கு லாபம் கொடுக்கும். மொத்தமாக பார்த் தால் 4 முதல் 5 மடங்கு வரை லாபம் இருக்கும். 30 சதவீத நிறுவனங்கள் தோல்விடையும் என்பது எங்களுக்கும் தெரியும். ஆனால் எந்த 30 சதவீதம் என்பது யாருக்கும் தெரியாது.
நீங்கள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பீர்கள். அதே நிறுவனத்தில் வேறு ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனமும் முதலீடு செய்திருக்கும். பல வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுக்குமான சமநிலை எப்படி இருக்கும்? இயக்குநர் குழு கூட்டம் எப்படி நடக்கும்?
இது தொழில்முனைவோருக்கு இருக்கும் சவால். ஒரே மனநிலை இருக்கும் முதலீட்டாளர்களை சந்தித்து அவர்களிடம் நிதி திரட்டு வது அவசியம். எங்களுக்கும் இன்னொரு நிறுவனத்துக்கும் உறவு சரியில்லை எனும் பட்சத்தில் அவர்களுடன் ஒரே இயக்குநர் குழுவில் இருப்பது என்பது, அந்த தொழில்முனைவோருக்கு பேரழிவாக முடியும். நாங்கள் தொழில்முனைவோர்களை பற்றி விசாரிக்கும்போது, அவர் களும் முதலீட்டாளர்கள் குறித்து விசாரிப்பது நல்லது. ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும், ஆனால் முற்றிலும் மாறு பட்ட கருத்துக்கான விவாதத்தை இதுவரை நான் கடந்து வந்த தில்லை.
ஒரு தொழில்முனைவோர் பிரான்ஸைஸி கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருப்பார். ஒரு வென்ச்சர் கேபிடலிஸ்ட் சரி என் பார். இன்னொருவர் தவறு என்பார். தவறுக்கான காரணம் அவரு டைய முந்தைய முதலீட்டில் பிரான் ஸைசியினால் பிரச்சினை உருவாகி இருக்கும். அப்போது விவாதித்து ஒரு முடிவுக்கு வருவோம்.
ஒரு தொழில்முனைவோர் ஏன் பல விசி நிறுவனங்களை நாட வேண்டும்? ஒரு நிறுவனத்திலிருந்தே மொத்த முதலீட்டையும் பெற்றால் என்ன?
ஒரு தொழில் முனைவோருக்குத் தேவையான அத்தனை தொகை யும் ஒரு விசி நிறுவனமே கொடுக்க முடியாது. எங்களுடைய முதலீட்டில் 15 சதவீதத்துக்கு மேல் ஒரு நிறுவனத்தில் இருக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது. தவிர ஒரு நிறுவனத்துக்கு எப்போது பணம் தேவைப்படும் என்று அவ்வளவு நேரம் நாம் காத்திருக்க முடியாது. மேலும் பல விசி நிறுவனங்கள் இருக்கும்போது பலவிதமான கருத்துகளை பரிமாறிக்கொள்ள முடியும், இயக்குநர் குழு பலமாக இருக்கும் என்பது உள்ளிட்ட பல நன்மைகள் உண்டு.
ஒரு தொழில்முனைவோர் தோற்க ஆரம்பிக்கிறார் என்று தெரிய வரும்போது உங்களது நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்?
முதலில் அந்த நிறுவனத்தை எப்படித் தேற்றலாம் அல்லது விற்கலாம் என்று யோசிப்போம். சில காலம் அவர்கள் மேம்பட உதவி செய்வோம். அதன் பிறகு மேலும் முதலீடு செய்வதை நிறுத்தி வைப்போம். அதன் பிறகு எங்களது உதவியை நிறுத்திவிடுவோம். அது நஷ்டம் என்ற முடிவுக்கு வந்து விடுவோம். நாங்கள் கொடுப்பது கடன் இல்லை. நாங்கள் செய்வது முதலீடு. இதில் 30 சதவீதம் தோல்வி அடையும் என்பது எங்களுக்கு தெரியும்.
ஒரு தொழில்முனைவோர் திடீரென கார் வாங்கி இருந்தார். விசாரித்த போது விசி முதலீடு கிடைத்தது என்ற தகவல் வந்தது. தொழில்முனைவோர்கள் கஷ்டப்பட்டு பணம் வாங்கி, அதனைத் தவறாக பயன்படுத்துகிறார்களா?
நாங்கள் முதலீடு செய்வதற்கு சில காலம் முன்பே அவர்கள் நிறுவனத்தைத் தொடங்கி சம்பளம் இல்லாமல் வேலை செய் கிறார்கள். அதன் பிறகு சில மாதங் களுக்கு பிறகுதான் நாங்கள் முதலீடு செய்கிறோம். அப்போது `இதுவரை நான் சம்பளமே எடுத்துக் கொள்வதில்லை. அதனால் ஒரு தடவை எனக்கு போனஸ் வேண்டும் என்றும் சம்பளம் வேண்டும்’ என்று தொழில்முனைவோர் எங்களிடம் கேட்பார். அதனைப் புரிந்து கொண்டு விசி நிறுவனங்கள் ஆராய்ந்து அவருக்கு சம்பளமும், போனஸும் கொடுக்கலாம் என முடிவெடுப்போம். பணம் எப்படி செலவாகிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகி றோம். நிறுவனங்கள் தோல்விடை யலாம், ஆனால் தொழில் முனை வோர்கள் ஏமாற்ற நினைப்ப தில்லை.
இ-காமர்ஸ் குமிழ் வரும் என்று பலர் சந்தேகிக்கிறார்கள்? அதற்கான சாத்தியம் உண்டா?
வரும் என்றே பலரும் கணித்தி ருக்கிறார்கள். ஒவ்வொரு வர்த்த கமும் லாபத்தில் நடக்க வேண்டும். அப்போதுதான் பிஸினஸ் நீண்ட காலத்துக்கு நிலைக்கும். உறுதி யாக முடிவெடுக்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
நன்றி தி இந்து
Recent Comments