‘முதல் நாளில் இருந்தே லாபம் கிடைக்க வேண்டும்’: இதயம் நல்லெண்ணெய் நிறுவனத் தலைவர் வி.ஆர்.முத்து நேர்காணல்
ரேடியோ கோலோச்சிய காலத்திலேயே விளம்பரங்கள் மூலம் தனது பிராண்டை மக்களுக்கு கொண்டு சென்றவர் இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் தலைவர் வி.ஆர்.முத்து. இப்போது விளம்பரங்களை எப்படி பார்க்கிறார், சமையல் எண்ணெய் விற்பதில் உள்ள சவால்கள் என்ன? என்பது போன்ற பல்வேறு விஷயங்களை பற்றி விருதுநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் விவாதித்தோம். அந்த விரிவான உரையாடலில் இருந்து.
மும்பையில் பிகாம் முடித்தவர். எம்பிஏக்கு முயற்சி எடுத்தவர் ஆனாலும் படிக்க முடியவில்லை. இப்போது எம்பிஏ மாணவர்களுக்கு அவ்வப்போவது வகுப்பெடுக்கிறார்.
1987-ம் ஆண்டே தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தொடங்கினீர்கள். அப்போது விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
எங்க ஊரில் காளிமார்க், விவிடி போன்ற பிராண்ட்கள் ஏற்கெனவே விளம்பரம் செய்துவந்தன. ஆனால் நல்லெண்ணெய்க்கு முதலில் விளம்பரம் கொடுத்தது நாங்கள் தான். பாம்பேயில் காமர்ஸ் படித் தேன். அதனால் விளம்பரங்கள் மீது இயல்பான ஒரு ஈர்ப்பு இருந்தது. நம் தொழிலுக்கு விளம்பரத்தை ஏன் பயன்படுத்த கூடாது என்று தொடங்கியதுதான் இதயம் நல்லெண்ணெய் விளம்பரம்.
நான் செல்லும் எம்பிஏ கல்லூரிகளில் எங்களுடைய விளம்பரம் ஏன் வெற்றி அடைந்தது என்று மாணவர்களிடம் கேட்பேன். பலவிதமான பதில்கள் இருக்கும். ஆனால் முக்கிய காரணம் அப்போது மக்களிடம் ரிமோட் இல்லை. ஒரே அலைவரிசையை பார்க்க வேண்டி இருந்ததால் எங்களுடைய விளம்பரம் வெற்றி அடைந்தது.
அதனால்தான் இப்போது விளம்பரங்களை குறைத்துவிட்டீர்களா?
அப்படியில்லை. விளம்பரங் களுக்கான பட்ஜெட்டை பழைய நிலைமையிலேயே தொடர் கிறோம். இப்போது பல மீடியாக்கள் வந்துவிட்டன. எந்த நிகழ்ச்சியை அதிகம் பார்க்கிறார்கள் என்று விளம்பரம் கொடுத்தால், விளம்பர இடைவேளையில் சானல் மாற்றுகிறார்கள். எந்த நிகழ்ச்சியை மக்கள் பார்க்கிறார்கள் என்று பார்த்து விளம்பரம் கொடுப்பதா, அல்லது எந்த சானலை மாற்றுகிறார்கள் என்று பார்த்து விளம்பரம் கொடுப்பதா?
தவிர, 10 லட்ச ரூபாய்க்கு விளம்பர பட்ஜெட் ஒதுக்கினால் ஒரே நாள் மட்டுமே விளம்பரம் கொடுக்க முடியும். ஆனால் என்னுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு 10 ரூபாய் தள்ளுபடி கொடுத்தால் 1 லட்சம் வீடுகளுக்கு என்னால் செல்ல முடியுமே.
டிவி உள்ளிட்ட மீடியம்களில் விளம்பரம் கொடுத்தால் இன்னும் அதிகமாக விற்பனையை அதிகரிக்க முடியாதா?
விளம்பரத்துக்கான செலவு செய் யும் தொகையில் பாதி தொகை வீண், ஆனால் எந்த பாதி என்பதை கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லுவாரக்ள். இதை கண்டு பிடிப்பதற்கான என்னுடைய நேரம் வீண். அதே சமயம் விளம்பரம் விற்பனையாக மாறுகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதற்காக விளம்பரமே தேவை யில்லை, வீண் என்று நான் சொல்ல வில்லை. ஆனால் மிகச்சரியாக செய்ய வேண்டும்.
எம்பிஏ மாணவர்கள் உங்களிடம் எது போன்ற கேள்விகளை கேட்கிறார்கள்?
என்னிடம் ஐடியா இருக்கிறது எப்படி தொழில் தொடங்குவது என்பது போன்ற கேள்விகளை கேட்கிறார்கள். இதற்கு என் னுடைய அனுபவத்தை பதிலாக கொடுத்தேன். கோபிநாத் என்ற வங்கி நண்பர் வந்தார். அவருக்கு வங்கித்துறை குறித்த அறிவு இருக்கிறது. வங்கி தொடங்கலாமா என்று என்னிடம் கேட்டார். நான் சரி என்று சொன்னேன். அதன்பிறகு நாங்கள் மைக்ரோபைனான்ஸ் நிறு வனத்தை தொடங்கினோம். இப் போது 200 நபர்கள் பணியாற்று கின்றனர். எண்ணமும், அனுபவ மும் இருக்கும்பட்சத்தில் முதலீட் டாளர்கள் கிடைப்பார்கள் என்று அந்த மாணவரிடம் கூறினேன்.
லாபம் சம்பாதிக்க இரண்டு வருடம் வரை காலம் எடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்து சந்தையில் இருக்கிறது. ஆனால் அனைத்து தொழிலுக்கும் இது பொருந்துவதில்லை. தொழில் ஆரம்பிக்கும்பட்சத்தில் முதல் நாளில் இருந்தே லாபம் கிடைக்க முயற்சி எடுங்கள். முதல் நாளில் லாபம் கிடைக்க வேண்டும் என்றால் அனுபவம் இருக்க வேண்டும். அனுபவம் இல்லை என்றால் ஏன் நஷ்டம் என்பதை தேடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
முறைப்படுத்தப்படாத நல்லெண் ணெய் சந்தையை ஒழுங்குபடுத்தி ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக் கினீர்கள். இந்த நெட்வொர்க்கை பயன்படுத்தி சமையல் எண்ணெய் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கலாமே. ரீபைண்ட் ஆயில் சந்தை வளர்ந்துவிட்டதே?
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் 80 ரூபாய் இருக்கும் போது எங்களுடைய விற்பனை நன்றாக இருந்தது. ஆனால் இடையில் 300 ரூபாய் வரைக்கும் விலை உயர்ந்துவிட்டது. இதனால் ஓரளவுக்கு மேல் வளர்ச்சி அடைய முடியவில்லை. அதனால்தான் இப்போது கடலெண்ணெய் சந்தையில் நுழைந்திருக்கிறோம்.
ரீபைண்ட் ஆயில் விற்பனையில் நுழைவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. எங்களுடைய அடிப்படை நல்லெண்ணெய்தான். ரீபைண்ட் ஆயில் விற்க ஆரம்பித்தால் அதனுடைய விற்பனை உயரும். அப்போது எங்களுடைய கவனம் நல்லெண்ணெயில் இருந்து சிதறும். மக்களுக்கு நல்லெண்ணெய் மற்றும் கடலெண்ணெய்தான் தேவை என்று நினைக்கிறேன்.
எள் விலை அதிகமாக இருந்தால் உங்களுக்கு தேவையான எள்ளை நீங்களே உற்பத்தி செய்ய முடியாதா?
அது மிகப்பெரிய ரிஸ்க். விவசாயிகளுக்கு உள்ள ரிஸ்க்கை நாங்கள் எடுத்துகொள்ள முடியாது. அப்படி எடுத்துக்கொண்டால் எங்களது தொழிலில் நாங்கள் சரியாக கவனம் செலுத்த முடியாது. தவிர நாங்கள் தரமான உயர் ரக எள்ளினை சந்தையில் வாங்குகிறோம். ஆனால் நாங்களே உற்பத்தி செய்யும் போது எதிர்பார்க்கும் தரம் கிடைக்குமா என்று தெரியாது. ஒரு வேளை கிடைக்கவில்லை என்றால் நாங்களே பயன்படுத்த வேண்டி இருக்கும். இல்லை சந்தையில் விற்க வேண்டி இருக்கும். இது தேவையில்லாதது. தவிர எங்களுக்கு தேவையான எள் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் 30,000 ஏக்கர் நிலம் தேவை.
நல்லெண்ணெய் இல்லாத ஊர்களில் புதிய சந்தையை உருவாக்கும் திட்டம் இருக்கிறதா?
எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. இத்தாலியில் இருப்பவர் கள் ஆலிவ் ஆயில் சாப்பிடவேண் டும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நல்லெண்ணெய் சாப்பிட வேண்டும். வட இந்தியாவில் இருப்பவர்கள் கடுகு எண்ணெய் சாப்பிட வேண்டும். அதனால் இதனை இத்தாலியில் கொண்டு விற்பனை நான் விரும்பவில்லை. ஆனால் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் விற்றுவருகிறோம்.
நல்லெண்ணெய் பயன்படுத்து பவர்களிடமே ஆயில் புல்லிங் கான்செப்டை கொண்டு செல்ல முடியாதபோது புதிய சந்தையில் விற்பது கடினம்.
நன்றி தி இந்து
Recent Comments