ர்வதேச அளவில் மிகப்பெரிய ஐ.பி.ஓ என பிரபலமான நிறுவனம் ஆன்ட் (Ant). சுமார் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐ.பி.ஓ பட்டியலாகும் சில நாள்களுக்கு முன் இதை நிறுத்தியிருக்கிறது சீனா.

சீனப் பங்கு வர்த்தக ஒழுங்கு முறையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்படுத்தாததே இந்த நிறுத்தத்துக்குக் காரணம் என்கிறது சீனா. தவிர, அலிபே (Alipay) என்னும் நிறுவனம் ஆன்ட் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் நிதிசார்ந்த செயல்பாடுகளில் உள்ள பிசினஸ் மாடல் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாலும், இந்த ஐ.பி.ஓ நிறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன் சீன அரசின்மீது ஜாக் மா கடும் விமர்சனங்களை வைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னும் ஆறு மாதங்கள் கழித்து இந்த ஐ.பி.ஓ மீண்டும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, இந்த ஐ.பி.ஓ வெற்றி அடைந்திருந்தால் 35 பில்லியன் டாலர் சந்தை மதிப்புகொண்ட நிறுவனமாக ஆன்ட் மாறியிருக்கும். அராம்கோ நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வுக்குப் பிறகு, மிகப்பெரிய ஐ.பி.ஓ-வாக இது இருந்திருக்கும்!

நன்றி : நாணயம் விகடன்