ரிலையன்ஸ் – அமேசான் இடையேயான யுத்தத்தில் அமேசானுக்கு சாதகமான ஒரு சிறு நடவடிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கும் இந்தச் சூழலில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் அந்த நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

ஜெஃப் பெசோஸ்

ஜெஃப் பெசோஸ்

அமேசான் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக லாபம் ஈட்டி வருகிறது. 10,000 கோடி டாலர் வருமானம் ஈட்டும் இந்தச் சூழலில், இவரது ராஜினாமா இருக்கிறது.

நிறுவனத்தின் அறக்கட்டளை நடவடிக்கை மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான புளு ஆர்ஜின் ஆகியவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக ஜெஃப் அறிவித்திருக்கிறார். அமேசான் நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்றும், அமேசான் நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளில் கலந்து கொள்வேன் என்றும் அறிவித்திருக்கிறார்.

அடுத்த தலைமைச் செயல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆண்டி ஜேசி,1997-ம் ஆண்டு முதல் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஹார்வர்டு பிசினஸ் கல்லூரியில் எம்.பி.ஏ படித்தவர். அடுத்த கட்டத்துக்கு நிறுவனத்தை நகர்த்தி சென்றதில் ஆண்டி ஜெசியின் பங்கும் முக்கியமானது. 2006-ம் ஆண்டு அமேசான் நிறுவனம் க்ளவுட் சேவையைத் தொடங்க இவர்தான் காரணம்.

நன்றி :நாணயம் விகடன்