சில ஆண்டுகளுக்கு முன்பு தொழில் தொடங்குவதற்கு விசிட்டிங் கார்ட் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஆப் என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

ஆப் இல்லை எனில் தொழிலை பெரிய அளவுக்கு வளர்க்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் ஆப் உருவாக்கும் நிறுவனங்களும் பெருமளவுக்கு வளர்ந்து வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த ’ஸ்மார்தெர் டெக்னாலஜீஸ்’ (Smarther Technologies) இந்த பிரிவில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. சிறப்பாக செயல்படும் ஆப் நிறுவனங்களுக்கான Enantra விருதினை 2017-ம் ஆண்டு இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் குமார் பாண்டியன் உடன் உரையாடினோம்.

இன்ஜினீயரிங் முடித்து தனியார் நிறுவனத்தில் சில காலம் வேலை செய்தேன். அதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறேன். பல நிறுவனங்களுக்குத் தேவையான இணையதளம் மற்றும் ஆப் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.

Smarther founder

”200-க்கும் மேற்பட்ட இணையதளம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆப்களை வடிவமைத்து கொடுத்திருக்கிறோம். ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலிகள் என அனைத்து வடிவங்களிலும் வாடிக்கையாளருக்கு தேவையான விஷயங்களை வடிவமைத்து தருகிறோம்,” என்றார்.

லாக்டவுன் தொடங்கிய போது நிறுவனத்தை நடத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. ஆனால் அதே லாக்டவுன் தான் எங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நாங்கள் 25-க்கும் மேற்பட்ட ஆப்களை வடிவமைத்து கொடுத்திருக்கிறோம். இத்தனைக்கும் எங்கள் அலுவலகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள் என குமார் கூறினார்.

எப்படி 25-க்கும் மேற்பட்ட ஆப்களை வடிவமைக்க முடிந்தது என்றதற்கு, குறிப்பிட்ட சில துறைகளில் எங்களுக்கு அனுபவம் மிக அதிகம். உதாரணத்துக்கு ஃபுட் டெலிவரி, இ-காமர்ஸ், சுற்றுலா, கல்வி, ஆட்டோமொபைல் சோசியல் மீடியா, ஹெல்த்கேர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் நிறுவனங்களுக்கான ஆப்களை நாங்கள் வடிவமைத்திருக்கிறோம்.

அதனால், அனைத்து ஆப்களுக்கும் அடிப்படை ஒன்றுதான். அந்த அடிப்படையை வைத்து வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப முழு ஆப்-யை நாங்கள் வழங்குவோம்.

உதாரணத்துக்கு இந்தியாவில் உணவு டெலிவரி ஆப் என்றால் முதல் வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஆர்டர் முதலில் ஓட்டல்களுக்கு செல்லும், ஓட்டல்கள் உணவை தயார் செய்த பிறகு டெலிவரி நபர்களுக்கு சென்று, அதற்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கு உணவு கிடைக்கும். இது வழக்கமான நடைமுறை.

ஆனால் சில வெளிநாடுகளில் வாடிக்கையாளர் உணவு ஆர்டர் செய்தவுடன் முதலில் டெலிவரி நபர்களுக்குச் செல்லும். அவர்கள் தயாராக இருக்கும் பட்சத்தில்தான் ஓட்டல்களுக்கு ஆர்டர் செல்லும். காரணம் வெளிநாடுகளில் டெலிவரி நபர்களுக்கு பிரச்சினை. இது ஒரு சிறிய உதாரணம். இதுபோல, சில சில தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாற்றிக்கொடுப்போம் எனக் கூறினார். மேலும்,

இந்தியாவை தவிர சவுதி, ஜெர்மனி, கம்போடியா உள்ளிட்ட 25 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆப் வடிவமைத்து கொடுத்திருக்கிறோம். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடனும் பணியாற்றினோம்.

வாடிக்கையாளர்கள் எப்படி கண்டறிகிறீர்கள் என்னும் கேள்விக்கும் விளக்கமாக குமார் பதில் அளித்தார். எஸ்இஓ மூலம் வாடிக்கையாளர்கள் எங்களைக் கண்டறிகிறார்கள்.

ஸ்மர்தெர்

App development company in Chennai என கூகுளில் தேடினால் முதல் பக்கத்திலே நாங்கள் இருப்போம். வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு ஆர்டர்கள் வந்தாலும் தமிழக பின்னணி கொண்டவர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்கள், அவர்கள்தான் எங்களுக்கான வாடிக்கையாளர்கள். சராசரியாக மாதத்துக்கு 150 விசாரணைகள் எங்களுக்கு வரும். நாங்கள் பலமாக இருக்கும் விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

அதேபோல, ஒரே சமயத்தில் அதிக ப்ராஜக்ட்களை நாங்கள் கையாளுவதில்லை. அதிக ப்ராஜக்ட்களை கையாள வேண்டி இருந்தால் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவார்கள். சீராக புதிய ஆர்ட்ர்கள் இல்லை எனில் சிரமப்பட வேண்டி இருக்கும் என்பதால் ப்ராஜக்ட்கள் விஷயத்தில் கவனமாக இருப்போம்.

ஒரு ஆப் டெவலப் செய்வதற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு, நிறுவனங்களுக்கு ஏற்ப இந்தத் தொகை மாறும் என குமார் கூறினார்.

இந்திய நிறுவனங்களிடம் மொத்தமாக ஒரு தொகை என பேசுவோம்.

குறைந்தபட்சம் 5 லட்ச ரூபாய் ஆகும். இதைத் தாண்டி பெரிய தொகைக்குக் கூட வடிவமைத்து கொடுத்திருக்கிறோம். அதிக பட்சம் ரூ.25 லட்சத்துக்கு கூட ஆப் வடிவமைத்து கொடுத்திருக்கிறோம். அது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தேவையை பொறுத்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் எனில் ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு டாலர் என தொகையை நிர்ணயம் செய்வோம்.

சிறு நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கும் ஆப் தேவையா, சிறு நகரஙக்ளில் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களா என்னும் கேள்விக்கு தொழில்நுட்பத்தின் அவசியத்தை குமார் விளக்கினார்.

smarter

ஆப் என்பது அனைத்து நிறுவனங்களுக்கும் தேவையா என்று கேட்டால் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அனைத்து நிறுவனங்களுக்கும் இணையதளம் என்பது முக்கியம். அதேபோல, சிறு நகரங்களில் இருந்தால் ஆப் தேவையில்லை என்னும் வாதம் தவறானது.

நடுத்தர நகரில் பெரிய மளிகைக் கடை இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு போன் மூலம் ஆர்டர் செய்தார்கள். அதன் பிறகு வாட்ஸ் ஆப்-ல் அனுப்பினார்கள். தற்போது ஆப் மூலம் ஆர்டர் செய்வதை மக்கள் விரும்புகிறார்கள். குறிப்பிட்ட அந்த பகுதி மக்கள் மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தாலும் சிறிய ஊர்களிலும் கூட ஆப்-க்கான தேவை இருக்கிறது என குமார் கூறினார்.

தற்போது 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் நாங்கள் செயல்பட்டுவருகிறோம். இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அடுத்தகட்டமாக ப்ராடக்ட் நிறுவனமாக மாற வேண்டும் என்னும் நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறோம் என குமார் விடைகொடுத்தார்.

விரைவில் அத்தியாவசிய பட்டியலில் ஆப்கள் இணையக்கூடும்..!

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்