செயில் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகும் நிறுவனத்தின் குடியிருப்பைக் காலி செய்யாமல் இருந்திருக்கிறார்.

அதற்கு வாடகையும் கொடுக்கவில்லை. வாடகை செலுத்தாத துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், எந்தத் தொகையையும் அவர் செலுத்தவில்லை என்பதால் நிறுவனம் கொடுக்க வேண்டிய பணிக்கொடையை (கிராஜூவிட்டி) நிறுத்தி வைத்தது.

பணிக்கொடையை நிறுத்தும் அதிகாரம் நிறுவனங்களுக்கு உண்டு..! - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இது தொடர்பான வழக்கு ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் நடந்தது. ஓய்வுக்காலத்துக்குப் பிறகு, குடியிருந்த காலத்துக்கு வழக்கமான வாடகை மட்டுமே வசூலிக்க முடியும். அபதாரம் விதிக்கக் கூடாது; பணிக்கொடையை உடனடியாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு மேல்முறையீட்டுக்குச் சென்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி கவுல் தலைமையில் விசாரணை நடந்தது. செலுத்த வேண்டிய அபராத்தை பணிக்கொடையிலிருந்து நிறுவனம் எடுத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பணி ஓய்வு பெற்ற பிறகும், நிறுவனத்தின் குடியிருப்பில் தங்கியிருந்தால் அபராதம் என்பது இயல்பானதுதான். அதனால் அந்த அபராதத்தை, நிறுவனம் கொடுக்க வேண்டிய தொகையிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம். பணிக்கொடையிலிருந்தும் எடுத்துக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

நன்றி : நாணயம் விகடன்