கொரோனாவுக்கு பிறகு வீடு என்பது முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதால் வீட்டிலே அதிக நேரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. தவிர குழந்தைகளின் படிப்பும் வீட்டில் இருந்தே நடப்பதால் வீடு என்பது மேலும் முக்கியதுவம் பெருகிறது.

அதனால் வாய்ப்புள்ளவர்கள் வீட்டின் அளவை அதிகரிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். ஒரு படுக்கை அறை உள்ளவர்கள் இரண்டு படுக்கை அறை வீட்டுக்கும், இரண்டு படுக்கை அறை உள்ளவர்கள் மூன்று படுக்கை அறை உள்ள வீட்டுக்கும் உயர முடிவெடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் கட்டுமானப் பொருட்களின் விலையும் ஏகத்துக்கும் அதிகரித்திருகிறது.

ரியல் எஸ்டேட் துறையில் தற்போது என்ன நடக்கிறது?, கொரோனாவின் பாதிப்புகள், விலை நிலவரங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் அக்‌ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டி பாபுவிடம் பேசினோம்.

”வீடு வாங்குவதற்கு எல்லா நேரமும் சரியான நேரம்தான். காரணம் வீடு என்பது அவசியமானது. அதைவிட தற்போது தேவையும் அதிகரித்துகிறது. அடுத்த 9 முதல் 24 மாதங்களில் இப்போதை விட குறைந்தபட்சம் 20 சதவீதம் அளவுக்கு வீட்டின் விலை உயரும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது வட்டி விகிதம் குறைவாக இருப்பதால் வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று சிட்டிபாபு தெரிவித்தார்.

Chitti Babu

அக்‌ஷயா ஹோம்ஸ் தலைவர் சிட்டி பாபு

கொரோனா பாதிப்பு

பூமியில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுனாமி, வெள்ளம், பூகம்பம் என பல இயற்கை பேரிடர்கள் உருவாகின்றன. ஆனால் இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே பாதிக்கும். ஆனால் கொரோனா ஒட்டுமொத்த உலகின் போக்கினையும் மாற்றிவிட்டது.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. வீட்டில் பெரிய வசதியும் இருக்காது. தேவையான அனைத்து வசதியும் அலுவலகத்தில் இருக்கும். ஆனால் தற்போது அலுவலகத்தில் இருக்கும் அத்தனை வசதியும் வீட்டிலும் தேவைப்படும் அளவுக்கு கொரோனாவின் தாக்கம் இருக்கிறது.

முதல் அலையில் மொத்தமும் நின்று விட்டது. தொழிலுக்குத் தேவையான பணப்புழக்கம், பணியாளர்கள் மற்றும் மூலப்பொருட்கள் என அனைத்து நின்றுவிட்டது. ஆனால் இரண்டாம் அலையில் பணியாளர்கள் ஓரளவுக்கு வேலை நடக்கும் இடத்தில் தங்கி இருந்தார்கள். ஆனால்,

மூலப்பொருட்கள் போதுமான அளவுக்குக் கிடைக்காததால் வேலை நடக்கவில்லை. ஆனால் எங்களுக்கு நிரந்தரச் செலவுகள் அப்படியே இருந்தன. அதனை எங்களால் குறைக்க முடியவில்லை. இதை எப்படி நிர்வாகிப்பது என்பதில்தான் சிக்கல் இருந்தது, என்று விளக்கினார் சிட்டி பாபு.

அலுவலகத் தேவைகள்

நாங்கள் பட்ஜெட் வீடுகள், நடுத்தர வீடுகள் சொகுசு வீடுகள், அலுவலகம் என பல கட்டுமான திட்டங்களில் இருக்கிறோம். தற்போது அலுவலகத் தேவைகளுக்கான ரியல் எஸ்டேட்டில் மந்த நிலை இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் வேறு வழியில் எங்களுக்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. வேர் ஹவுஸ், டேட்டா சென்டர், லாஜிஸ்டிக்ஸ் என வர்த்தக ரீதியிலான ரியல் எஸ்டேட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பல விசாரணைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

விலை நிலவரம்

இப்போதக்கு வீடு எதற்கு, பிறகு வாங்கிக்கொள்ளலாம் என நினைத்த பலர், உடனடியாக வீடு வாங்க முடிவெடுத்தனர். அதனால் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நல்ல முன்பதிவு இருந்தது. ஆனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் எதுவும் நடக்கவில்லை. இந்த இரண்டு மாங்களில் முன்பதிவு நடக்காத்தால் ஜூன் மற்றும் ஜூலையில் வீடு முன்பதிவில் மக்கள் அதிக ஆர்வம் காண்பிக்கின்றனர்.

கோவிட்டுக்கு பிறகு பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆங்காங்கே ஒரிரு திட்டங்கள் அறிமுகம் செய்யபப்பட்டாலும் வழக்கமான புதிய புராஜக்ட்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. அதனால் ஏற்கெனவே கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் புராஜக்ட்களில்  உள்ள வீடுகள் வேகமாக முன்பதிவு செய்யப்படுகின்றன. சப்ளை இல்லாததால் வீடுகளின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

இந்த சமயத்தில் சிமெண்ட், ஸ்டீல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. வெளியூர் சென்றிருக்கும் பணியாளர்கள் மீண்டும் திரும்பவில்லை. அதனால் பணியாளர்கள் கட்டணம் உயர்ந்திருக்கிறது. புதிய புராஜக்ட்கள் போதுமான அளவுக்கு இல்லை, ஆனால், தேவை உயர்ந்திருக்கிறது. இதனால் வீடுகளின் விலை உயரும் வாய்ப்பு இருக்கிறது.

வழக்கமாக எங்களது கணிப்புகள் நீண்ட காலத்துக்குதான் இருக்கும். ஆனால்,

தற்போது குறுகிய காலத்திலே வீடுகளின் விலை உயரக்கூடும். 9 மாதங்கள் முதல் 24 மாதங்களில் 20% முதல் 25% வரை வீடுகளின் விலை உயர்வதற்கான சாத்தியம் இருக்கிறது. இந்த விலையேற்றம் வர்த்தக ரீதியிலான ரியல் எஸ்டேடிலும் இருக்கும். 2008-ம் ஆண்டு பரபரப்பரப்பாக இருந்தது போல மீண்டும் ரியல் எஸ்டேட் அடுத்த சில மாதங்களில் பரப்பரப்பாகும்.

ரியல் எஸ்டேட்டில் காத்திருந்து வாங்குவது என்பது எப்போதும் நஷ்டத்தையே கொடுக்கும். தற்போதைய சூழலில் காத்திருப்பதால் மேலும் வாய்ப்புகளை இழக்கவே சாத்தியம் அதிகம். தவிர வீடு வாங்குபவர்களுக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்காது.

பெரும்பாலான வீட்டுக்கடன் விகிதம் ஏழு சதவீத வட்டி விகிதத்துக்குள்ளே இருக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு 8 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் இருந்தது. ஆனால் தற்போது 7 சதவீதத்துக்குள்ளே பல வங்கிகள் கடன் வழங்குகின்றன. தற்போதைக்குக்கு குறைந்தபட்சம் வட்டி விகிதம் 6.6 சதவீதமாக இருக்கிறது. அதனால் வீடு வாங்குபவர்களுக்கு இதைவிட சரியான நேரம் கிடைக்காது.

அப்படியானால் எப்போது புது புராஜக்ட்கள் எப்போது வரத்தொடங்கும், புது திட்டங்கள் வந்தால் விலை குறையாதா? என்று கேட்டதற்கு,

புதுத் திட்டங்களுக்கு அனுமதி வாங்கும் வழக்கமான அளவுக்கு வருவதற்கு இன்னும் இரு ஆண்டுகள் ஆகும். ஆனால் அப்போது சந்தையில் இயல்பு நிலை திரும்பி, தேவையும் உயர்ந்திருக்கும் என்பதால் விலை குறைப்புக்கு வாய்ப்பில்லை.

இதர நகங்களில்

கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் இதே சூழல்தான் நிலவுகிறது. மூலப்பொருட்கள், பணியாளர்கள் என தமிழ்நாடு முழுவதும் இதே சூழல்தான். தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து பலர் சென்னை வந்து வேலை செய்தனர். அவர்கள் எல்லாம் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று  ஓர் ஆண்டுக்கு மேலாகி விட்டது. அதனால் சென்னை அளவுக்கு அடுத்த கட்ட நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது என்று சிட்டி பாபு கூறினார்.

வீட்டுக்கான தேவையும் இருக்கிறது வாங்கும் சூழலும் இப்போது இருக்கிறது அதனால் வீடு வாங்க நினைப்பவர்கள் தாமதப்படுத்த வேண்டாம் என்பதே சிட்டி பாபு சொல்வதன் சாரம்சம்.

வீடு வாங்குவோரின் கவனத்துக்கு!

நன்றி : யுவர் ஸ்டோரி தமிழ்